தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக வருகிற 13-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு வரும் உயர் தர மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். தொடர்ந்து அவர் இதய நோய் தீவிர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, நவீன சி.டி.ஸ்கேன் கருவி மையம், இதயம் மற்றும் நரம்பியல் நோய் சிகிச்சைக்காக ரூ.6½ கோடி மதிப்பில் தற்போது அமைக்கப்பட்டு வரும் நரம்பியல் நோய்க்கான நவீன பைப்-லைன் கேத்லேப் கருவி, சிறுநீரகம், இதயம், குடல் நோய்களை துல்லியமாக கண்டறியும் துணை கேத்லேப் என்ற கருவி ஆகியவை பொருத்தும் மையம் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்குள்ள பிரிவுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளிடம் அரசு ஆஸ்பத்திரியில் வழங்கி வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்தார். ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன், இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பானுமதி, இணை இயக்குனர் சந்திரசேகர் உள்பட டாக்டர்கள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியார் மருத்துவமனைக்கு நிகரான உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் உயர் தர மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு நோயாளிகளின் வசதிக்காக பல்வேறு நவீன கருவிகள் வாங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சைக்கா திட்டத்தின் மூலம் உயர் தர சிகிச்சைக்காக ரூ.189 கோடி மதிப்பில் 79 வகையான நவீன கருவிகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக ஜப்பான் நாட்டு வல்லுனர்களுடன் இணைந்து எந்த மாதிரி கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான மண்டல கேன்சர் மையம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் லீனியர் ஆக்சலேட்டர் மற்றும் பிரேக்கி எனும் அதி நவீன கருவி 3 மாதத்தில் பொருத்தப்படும். கோவை அரசு ஆஸ்பத்திரியில் தொற்று நோய் சிகிச்சை பிரிவுக்கு சிறப்பு துறை விரைவில் கொண்டுவரப்படும்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, செங்கிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களில் 700 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே கூறி உள்ளோம். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு கேட்டு இருந்த அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தும் விதமாக வருகிற 13-ந் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன், நானும் சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்துபேச உள்ளோம். தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தாமதம் காட்டி வருவதாக கூறப்படும் கருத்துகள் முற்றிலும் தவறானதாகும். தமிழகத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி இல்லாத ஆஸ்பத்திரிகளில் அந்த வசதியை கொண்டு வர உத்தரவிடப்பட்டு உள்ளது.
தாய் சேய் நலத்தை பாதுகாப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல்வேறு நவீன வசதிகளை செய்து வருகிறோம். அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச புகார்கள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரி டீன் அல்லது இருப்பிட மருத்துவ அதிகாரியிடம் நோயாளிகள் புகார் தெரிவிக்கலாம். கோடை கால நோய்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க அனைத்து சுகாதார மையங்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள குறைகள் குறித்து 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மத்திய அரசின் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story