வாகன சோதனையில் கவனமுடன் போலீசார் செயல்பட வேண்டும் உயர் அதிகாரி அறிவுரை
வாகன சோதனையில் கவனமுடன் போலீசார் செயல்பட வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.
கரூர்,
கர்ப்பிணி உஷா பலியான சம்பவம் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் அசம்பாவிதம் ஏற்படாமல் கவனமுடன் போலீசார் செயல்பட வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.
திருச்சி திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்றவரின் மோட்டார் சைக்கிளை இன்ஸ்பெக்டர் காலால் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உஷா பலியானார். அவரது கணவர் ராஜா காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பிணி உஷா பலியான சம்பவம் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது போலீசார் தன்மையான போக்கை கடைப்பிடிக்க போலீஸ் உயர் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
வாகன சோதனையின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் போலீசார் கவனமுடன் செயல்பட வேண்டும். மேலும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட வேண்டாம்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்களை போலீசார் விரட்டி சென்று பிடிக்க வேண்டாம். வண்டியை நிறுத்தாமல் சென்றால் துரத்தி சென்று பிடிக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். அதிக கெடுபிடியுடன் வாகன சோதனையை மேற்கொள்ள வேண்டாம். தினமும் குறிப்பிட்ட வழக்குகள் மோட்டார் வாகன சோதனையில் போட வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. சிறிது நாட்களுக்கு வாகன சோதனையை நிறுத்தி வையுங்கள். மறு உத்தரவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துக்கொள்ளலாம் என உயர் போலீஸ் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு கூறினர்.
கர்ப்பிணி உஷா பலியான சம்பவத்தால் கடந்த 2 நாட்களாக போலீசார் வாகன சோதனையை குறைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story