அரசு அதிகாரிகள் 9 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை அதிரடி சோதனை
அரசு அதிகாரிகள் 9 பேரின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாகவும், ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 9 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதன்படி, பெங்களூரு மாநகராட்சி சிக்பேட்டை மண்டலத்தில் உதவி என்ஜினீயராக இருந்து வருபவர் கங்காதர். இவருக்கு சொந்தமான நந்தினி லே-அவுட்டில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அவருடைய வீட்டில் இருந்து முக்கிய சொத்து பத்திரங்கள், ஆவணங்களை கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோல, பெங்களூருவில் அரசு துறையில் அதிகாரியாக பணியாற்றுபவர் ருத்ரபிரசாத். பெங்களூரு மல்லத்தஹள்ளி மற்றும் பனசங்கரியில் உள்ள ருத்ரபிரசாத்துக்கு சொந்தமான வீடுகளில் நேற்று ஊழல் தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள், கார், தங்க நகைகள், ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மேலும், ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் ரகுநாத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர, பெலகாவியில் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு அதிகாரி ராஜஸ்ரீ, உடுப்பியில் கலால்துறை துணை சூப்பிரண்டாக பணியாற்றும் வினோத்குமார், கொப்பல் மாவட்டம் கங்காவதியில் கிராமப்புற குடிநீர் திட்டத்தின் உதவி என்ஜினீயரான விஜயகுமார், கோலார் மாவட்டம் சீனிவாசப்புராவில் உதவி என்ஜினீயராக உள்ள அப்பிரெட்டி, சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் வேளாண்துறை உதவி என்ஜினீயர் சிவகுமார், சிக்கமகளூருவில் அரசு அதிகாரியாக பணியாற்றும் விருபாக்ஷா ஆகியோர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 9 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினரின் வீடுகள் என 36 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது அந்த அதிகாரிகள் வீடுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் போலீசார் கையில் சிக்கியது. அந்த அதிகாரிகளின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. சோதனை நடத்தப்பட்ட 9 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருந்தது அம்பலமாகி உள்ளது.
அந்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், அரசு அதிகாரி ராஜஸ்ரீயின் கணவர் ஸ்ரீதர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதும், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் விஜயாப்புரா மாவட்டத்தில் போட்டியிட இருப்பதும் தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் ஒரே நேரத்தில் 9 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story