கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் தவறி விழுந்த மீனவர் பரிதாப சாவு


கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் தவறி விழுந்த மீனவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 10 March 2018 4:59 AM IST (Updated: 10 March 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி சானல்ரோட்டை சேர்ந்தவர் பெர்னாட். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரி லூர்துமாதா தெருவை சேர்ந்த ஜான் வின்சென்ட் (வயது 56) உள்பட 13 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று காலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஜான் வின்சென்ட் திடீரென படகில் தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. உடனே சக மீனவர்கள் அவரது காயத்தில் கட்டுபோட்டு காப்பாற்ற முயன்றனர். ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இறுதியில் ஜான் வின்சென்ட் படகிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து படகில் இருந்தவர்கள் அவசரமாக கரை திரும்பினர். அவர்கள் கரை வந்து சேர்ந்ததும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீனவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஜான் வின்சென்டுக்கு கீதா என்ற மனைவி உள்ளார்.

Next Story