காரிமங்கலத்தில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது


காரிமங்கலத்தில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 6:24 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தில் போலீசார் வாகன தணிக்கையின் போது காவேரிப்பட்டணத்தை சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்தனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நேற்று காரிமங்கலத்தில் பாலக்கோடு சாலையில் உள்ள கூட்டுறவு வங்கி அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள எம்.சவுளுர் கிராமத்தை சேர்ந்த லெனின் (வயது 40) என்பதும், அவர் காரிமங்கலம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது.

மேலும் லெனின் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடும் பிரபல திருடன் என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் லெனினை கைது செய்தார். அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story