கவலை தரும் காண்டாமிருக அழிவு


கவலை தரும் காண்டாமிருக அழிவு
x
தினத்தந்தி 10 March 2018 1:43 PM IST (Updated: 10 March 2018 1:43 PM IST)
t-max-icont-min-icon

காண்டாமிருகங்களின் அழிவுக்கும் மனிதர்களின் எதிர்காலத்துக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

லகில் அதிவேகமாக நிகழ்ந்துவரும் காண்டாமிருக அழிவு, மனிதகுலத்தின் கவலைக்குரிய ஒன்று. காரணம், காண்டாமிருகங்களின் அழிவுக்கும் மனிதர்களின் எதிர்காலத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

உலகில் பல்வேறு உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. வருகிற 2050-ம் ஆண்டுக்குள், உலகில் உள்ள உயிரினங்களுள் 30 முதல் 50 சதவீதமானவை அழிந்துவிடுமாம்.

இது இயற்கையாய் நிகழும் விஷயம் அல்ல. மனிதனின் செயல்பாடுகள்தான் இந்த அழிவுக்கு காரணம்.

உதாரணத்துக்கு, தற்போது பூமியில் சுமார் 5 ஆயிரம் கிழக்கத்திய கொரிலாக்கள் உள்ளன. போரினாலும், வேட்டையினாலும் இவற்றின் எண்ணிக்கை, வருகிற 2050-ம் ஆண்டுக்குள் வெறும் 350 ஆக குறைந்துவிடுமாம்.

இது வருத்தத்துக்குரிய நிலை என்றாலும், விலங்குகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. அழிந்துவரும் வனவிலங்கு என்று பட்டியலிடப்பட்டு இருந்த கருப்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமுர் சிறுத்தையின் எண்ணிக்கை 2007-ம் ஆண்டு 30 என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்று அதன் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

இண்ட்ரி லெமூர் என்ற விலங்கின் எண்ணிக்கை இப்போது சுமார் பத்தாயிரம். ஆனால், இது 2050-ம் ஆண்டுக்குள் இரண்டாயிரமாக குறையக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலைக்குக் காரணம் அதன் வாழ்விட அழிப்பும், வேட்டையும்தான்.

இவை மட்டுமின்றி, 30 முதல் 50 சதவீத உயிரினங்கள் பூமியில் இருந்து முற்றிலுமாக மறையும் நிலையில் உள்ளன.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிதியத்தால், அருகிவரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் என 5 ஆயிரம் உயிரினங்கள் பட்டியலிட்டுள்ளன. அவற்றில் சீனாவில் உள்ள யுனான் பாக்ஸ் ஆமை, சுமத்திரா காண்டாமிருகம், ஆரஞ்சு நிறத்தில் வயிற்றுப் பகுதி கொண்ட கிளி ஆகியவையும் அடங்கும்.

குறிப்பாக சுமத்திரா காண்டாமிருகம் தற்போதே நூறுக் கும் குறைவாகத்தான் உள்ளது. தீவிர வேட்டையே இவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம்.

இந்த காண்டா மிருகங்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்களின் அழிவு குறித்து நாம் நிச்சயம் கவலைப்பட்டாக வேண்டும்.

காரணம், உணவுச் சங்கிலியின் கண்ணியாகத் திகழும் ஒவ்வொரு விலங்கும் முக்கியமானது. அவற்றில் ஒன்று அழிந்தாலும், உணவுச்சங்கிலியின் உச்சத்தில் உள்ள மனிதனுக்கு நிச்சயம் ஆபத்துதான்.

எனவே, உயிரினங்களைக் காக்கும் நடவடிக்கைகளை நாம் முடுக்கிவிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். 

Next Story