பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது.
திருப்பூர்,
திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 63). இவர் அந்த பகுதியில் எஸ்.பி.ஏ. என்ற பெயரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ள அதே வளாகத்தின் ஒரு பகுதியில் பனியன் துணி தயாரிக்கும் நிட்டிங் நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மற்றொரு பகுதியை ராயபுரத்தை சேர்ந்த ஜெயபிராகாஷ்(64) என்பவர் குத்தகைக்கு எடுத்து நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை நிட்டிங் நிறுவனங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. மதியம் சுமார் 12.30 மணியளவில் நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் சிறிது நேரத்தில் மளமளவென நிறுவனம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்படி தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏராளமான தனியார் தண்ணீர் லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தால் அந்த நிறுவனத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி செய்யப்பட்ட நிட்டிங் எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
அத்துடன் அந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளும் இடிந்து விழுந்தன. மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க மீதமிருந்த கட்டிடத்தின் சுவர்களையும் பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் இடித்து அகற்றினார்கள்.
பனியன் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த தீயை வீரர்கள் விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீவிபத்து நடந்த இடத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் ஊழியர்களிடமும், உரிமையாளர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story