புதிய பஸ்நிலையம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு
திண்டிவனத்தில் புதிய பஸ்நிலையம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு, திட்ட மதிப்பீடு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தலைமை தாங்கினார். சீதாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதிய பஸ்நிலையம் அமைப்பதற்கான இடத்தை எங்கு தேர்வு செய்தாலும் அதை அனைவரும் வரவேற்போம், மேலும் மழைநீர் பஸ் நிலையத்திற்குள் தேங்காத வகையில் பார்த்து கட்ட வேண்டும்.
இதற்கான திட்ட மதிப்பீட்டை உடனடியாக தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்து, பஸ்நிலையம் கட்டும் பணியை தொடங்கிட அனைத்து துறை அதிகாரிகளும் உதவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் தரப்பில் பேசினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்தார்.
கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பார்வேந்தன், மண்டல துணை தாசில்தார் பழனி, நகராட்சி பொறியாளர் சுமதி செல்வி, விழுப்புரம் விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஆனந்தராம், திண்டிவனம் கிளை மேலாளர் பழனி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கனகராஜ், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜாபாதர், பழனி, அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராம்டெக்ஸ் டைல்ஸ் வெங்கடேசன், பால்பாண்டியன் ரமேஷ், ஏழுமலை, உலகநாதன், கல்கண்டுசுந்தரம், சேரன், வக்கீல் ரமணன், புலிராஜாராம் உள்பட அரசுத்துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story