மாயமானதாக தேடப்பட்ட பழ வியாபாரியை வெட்டிக்கொன்று சாக்கடையில் வீசிய 4 பேர் கைது
மாயமானதாக தேடப்பட்ட பழ வியாபாரியை வெட்டிக்கொன்று சாக்கடை வாய்க்காலுக்குள் வீசியது தெரியவந்தது. ஒரு ஆண்டுக்கு பின்னர் இந்த வழக்கில் துப்புத்துலக்கி 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது24). பழ வியாபாரி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந் தேதி மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணாததால் இதுகுறித்து மணிகண்டனின் தாய் லட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவரை, நண்பர்கள் கொலை செய்ததாக போலீசுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மணிகண்டனின் நண்பர்களான புலியகுளத்தை சேர்ந்த லியோ மார்ட்டின்(22), ஜோஸ்(22), கணபதியை சேர்ந்த சிவா விஷ்ணு(25) ஆகியோர் கொலை செய்ததும், 3 பேரும் ராமநாதபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மணிகண்டனை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் 3 பேரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு கஞ்சா பழக்கமும் இருந்தது. சம்பவத்தன்று இவர்களுடன் மணிகண்டனும் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் மணிகண்டன், ‘திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசாரிடம் கூறி விடுவேன்’ என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் புலியகுளத்தை சேர்ந்த செந்தில் (45) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவரையும் கைது செய்தனர்.
மணிகண்டனை கொலை செய்ததும் உடலை துண்டு, துண்டாக வெட்டி ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை வாய்க்காலில் வீசி உள்ளனர். கொலை நடந்து 1 ஆண்டுக்கு மேல் ஆகிய நிலையில் போலீசார் சாக்கடை வாய்க்கால் செல்லும் பாதை முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தேடிப் பார்த்தும் உடல் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி 4 பேரையும் கைது செய்தனர். கொலை மற்றும் தடயங்களை அழித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story