புதுவையில் 1½ ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும், நாராயணசாமி உறுதி
புதுவையில் 1½ ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதுல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி மற்றும் இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினேன். புதுச்சேரி துறைமுகத்தில் மண் தூர்வாரப்பட்டு, கப்பல்கள் மூலம் சரக்குகளை இறக்குவதற்கான வெள்ளோட்டமும் நடைபெற்றுள்ளது. எனவே சென்னையில் இருந்து கப்பல் மூலம் புதுச்சேரிக்கு சரக்குகளை கொண்டுவந்து, இறக்கி ஏற்றும் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இந்த மாத இறுதியில் புதுச்சேரி வந்து அந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக ஒப்புக்கொண்டனர்.
மத்திய எரிவாயுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானையும் சந்தித்து பேசினேன். ஏற்கனவே மத்திய அரசு ஏனாமில் வீடுகள், பெட்ரோல் பங்குகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்க திட்டத்தை செயல்படுத்த ஏற்றுக்கொண்டது. அதன்படி தற்போது ஏனாமில் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதியிலும் வீடுகள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயுகளை குழாய் மூலம் அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள கோரிக்கை வைத்தோம். அதனை அவரும் ஏற்றுக்கொண்டார். இதற்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது. மேலும் 1½ ஆண்டில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் மூலம் குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் நாட்டின் முதல் மாநிலமாக புதுச்சேரி இருக்கும்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் ‘ருபன் கிளஸ்டர்’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தி வருகிறது. அதில் புதுச்சேரியில் பாகூர் கிராமத்தையும், காரைக்காலில் திருநள்ளாறு கிராமத்தையும் தத்தெடுக்க கேட்டுக்கொண்டோம். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். இரு கிராமங்களுக்கும் ரூ.200 கோடி கொடுக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன் மூலம் இரு கிராமங்களுக்கும் அனைத்து வசதிகளும் கொண்டுவரப்படும்.
திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத மாநிலமாக புதுவையை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஏற்கனவே மாகி, ஏனாம் பகுதி திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியில் 95 சதவீதத்திற்கும் மேலான வார்டுகளில் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்ல வேண்டும் என்றால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சென்று வர வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று முதற்கட்டமாக 28 அரசு அலுவலக கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.
பிற மாநிலங்களைப்போல் கவர்னர் ஒப்புதல் அளித்தால் புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்துவிட முடியாது. திட்டக்குழு கூட்டத்தை கூட்டி நிதி முடிவு செய்யப்படவேண்டும். அதை கவர்னருக்கு அனுப்ப வேண்டும். கவர்னர் மத்திய உள்துறைக்கும், உள்துறை, நிதித்துறைக்கும், நிதித்துறை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும். அடுத்த மாதம்(ஏப்ரல்) மீண்டும் சட்டசபை கூடி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் குறித்து அனைத்து அமைப்புகளுடனும், கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story