புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மலைக்கோட்டை,

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திறுவெறும்பூரில் கர்ப்பிணி உஷாவின் சாவுக்கு காரணமானவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உஷாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கோ.சங்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொறுப்பாளர் பெல் முத்து, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அருள்ஜோதி, மாவட்ட பொறுப்பாளர் கோபி, மாவட்ட துணை செயலாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டு, உஷா உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

Next Story