சீருடை பணியாளர் தேர்வு இன்று நடக்கிறது கரூரில் 3 ஆயிரத்து 258 பேர் எழுதுகின்றனர்


சீருடை பணியாளர் தேர்வு இன்று நடக்கிறது கரூரில் 3 ஆயிரத்து 258 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 11 March 2018 3:45 AM IST (Updated: 11 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

சீருடை பணியாளர் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கரூரில் 3 ஆயிரத்து 258 பேர் எழுதுகின்றனர். தேர்வு மையத்தை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆட்கள் தேர்வில் எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கரூரில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம், அட்லஸ் மினி கலையரங்கம், கொங்கு கல்லூரி வகுப்பறைகளில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை மொத்தம் 3 ஆயிரத்து 258 பேர் எழுதுகின்றனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு வசதியாக கரூர் பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு சிறப்பு பஸ்கள் இன்று காலை இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் தேர்வு நடைபெற உள்ள மையத்தை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் இருக்கைகள் அமைப்பை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் தேர்வர்களை பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்க உள்ளனர். தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

Next Story