எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 16-ந் தேதி தொடக்கம்: 12 ஆயிரத்து 518 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. கரூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 518 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். வினாத்தாள் மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர்,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதேபோல பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ- மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி முடிவடைகிறது. கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 53 மையங்களில் நடைபெற உள்ளது. 6 ஆயிரத்து 338 மாணவர்களும், 6 ஆயிரத்து 180 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 518 பேர் எழுத உள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 435 பேர் எழுத உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் காந்திகிராமத்தில் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்வை முறைகேடு இல்லாமல் நடத்தி முடிக்க அறிவுரைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார். மேலும் தேர்வு அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் ஏற்கனவே வந்து விட்டன. மேலும் வினாத்தாள்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளி மையத்தில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Tags :
Next Story