ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
மெய்யூர், கொள்ளானூர் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை மண்டல துணை தாசில்தார் கதிர்வேல் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் வருவாய் ஆய்வாளர் தேன்மொழி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மதன்குமார், கிராம நிர்வாக அதிகாரி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதியோர் உதவி தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 52 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மண்டல துணை தாசில்தார் கதிர்வேல் பெற்றுக்கொண்டார்.
இதில், 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 40 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 12 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை மண்டல துணை தாசில்தார் கதிர்வேல் பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த கொள்ளானூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. துணை தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவழகன், ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மொத்தம் 42 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அதற்கான நலத்திட்ட உதவி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக கிராம நிர்வாக அதிகாரி சூர்யபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுகன்யா, இளநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரமணி, கிராம நிர்வாக அலுவலர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் திருப்பாச்சூர் பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு 185 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் தெரிவித்தார். இந்த முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுப்பிரமணியன், சீனிவாசன், உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story