பள்ளி நிர்வாகி தவறவிட்ட கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் குழந்தைகளுக்கு இலவச கல்வி
பள்ளி நிர்வாகி ஆட்டோவில் தவறவிட்ட கைப்பையை திரும்ப ஒப்படைத்து, தனது குழந்தைகளுக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் இலவச கல்வி பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை,
மும்பை செம்பூர் பகுதியில் தனியார் ஆங்கில தொடக்க பள்ளி நடத்தி வருபவர் சரளா(வயது68). இவர் 2 மாதங்களுக்கு முன் ஆட்டோவில் தனது பள்ளியில் இருந்து அருகே உள்ள இடத்திற்கு சென்றார். அப்போது, அவர் தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டார். அந்த கைப்பையில் மாணவர்களிடம் இருந்து வசூலித்த பள்ளி கட்டணம் ரூ.80 ஆயிரம் மற்றும் கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் இருந்தன.
கைப்பையை ஆட்டோவில் தவறவிட்ட சரளா செய்வது அறியாமல் திகைத்தார். உடனடியாக அவர் பள்ளிக்கு கூடத்திற்கு திரும்பிச்சென்றார்.
இந்தநிலையில் அடுத்த ½ மணி நேரத்தில் சரளா கைப்பையை தவறவிட்ட ஆட்டோ அவர் பள்ளி முன்பு வந்து நின்றது. ஆட்டோ டிரைவர் அமித், சரளாவிடம் அவர் தவறவிட்ட கைப்பையை பத்திரமாக ஒப்படைத்தார். அப்போது, வெறும் நன்றியை மட்டும் கூறிவிட்டு, சரளா ஆட்டோ டிரைவரிடம் இருந்து கைப்பையை வாங்கிக்கொண்டார். ஆட்டோ டிரைவரும் எதையும் எதிர்பார்க்காமல் அங்கு இருந்து உடனடியாக சென்றுவிட்டார்.
இந்தநிலையில் தவறவிட்ட கைப்பையை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு எதாவது செய்யவேண்டும் என சரளா நினைத்தார். ஆனால் ஆட்டோ டிரைவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் அவர் கடந்த 2 மாதங்களாக ஆட்டோ டிரைவர் அமித் பற்றி பல்வேறு நபர்களிடம் விசாரித்தார்.
ஒருவழியாக அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ டிரைவர் அமித்தின் செல்போன் எண் கிடைத்தது. உடனடியாக அவர் ஆட்டோ டிரைவரை தொடர்புகொண்டு பள்ளிக்கு வரவழைத்து ரூ.10 ஆயிரம் பரிசு அளித்தார். மேலும் ஆட்டோ டிரைவர் அமித்திடம் பேசியபோது, அவர் வறுமையில் இருப்பது தெரிவயவந்தது. இதையடுத்து சரளா ஆட்டோ டிரைவரின் 2 குழந்தைகளுக்கும் தனது பள்ளியிலேயே இலவச கல்வி வழங்க முன் வந்துள்ளார். இதன் காரணமாக ஆட்டோ டிரைவர் அமித் நெகிழ்ச்சி அடைந்தார்.
இது குறித்து சரளா கூறுகையில், ‘ஆட்டோ டிரைவர் அமித் எனது கைப்பையை திருப்பி தராமல் இருந்து இருந்தால் பல்வேறு பிரச்சினைகளை நான் சந்தித்து இருப்பேன். ஏழ்மையில் உள்ள அவரது பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்க முடிவு செய்து உள்ளேன்’ என்றார்.

Related Tags :
Next Story