சகன் புஜ்பாலுக்கு ஏதாவது நேர்ந்தால் பா.ஜனதா அரசு தான் பொறுப்பு
சகன் புஜ்பாலுக்கு உடல்நிலை காரணமாக ஏதாவது நேர்ந்தால் அதற்கு பா.ஜனதா அரசு தான் பொறுப்பு என்று சரத்பவார், முதல்-மந்திரி வேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை,
மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சகன் புஜ்பால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் 71 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சிறையில் வாடும் சகன் புஜ்பாலுக்கு விதிவசத்தால் ஏதேனும் ஆபத்து நேருமாயின், அதற்கு உங்கள் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் பதிவு செய்துகொள்கிறேன். நான் உங்களிடம் இருந்து சரியான மருத்துவ சிகிச்சையை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரது வயதையும், உடல்நிலை குறித்தும் அறிந்திருந்தால், அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அவரின் ஜாமீன் மனு மீண்டும், மீண்டும் மறுக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. இருப்பினும் நான் அதுகுறித்து ஏதும் கூற விரும்பவில்லை.
சகன் புஜ்பால் அனைவரும் மதிக்கும் மிகப்பெரிய தலைவர். அவர் வாழ்க்கையில் 50 ஆண்டு காலத்தை மக்களின் நலனுக்காக தியாகம் செய்துள்ளார்.
மும்பை மேயராகவும், துணை முதல்-மந்திரியாகவும், உள்துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலா துறைகளின் மந்திரியாகவும் அவர் செய்த சேவைகளை மராட்டிய மக்களின் மனதில் இருந்து யாரும் அழித்துவிட முடியாது.
இவ்வாறு முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story