கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது
தொழில்நுட்ப கோளாறால் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் பெண் விமானி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
மும்பை,
மும்பை கடலோர காவல்படை தளத்தில் இருந்து நேற்று மதியம் ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான ரோந்து பணிக்கு புறப்பட்டது. ஹெலிகாப்டரில் பெண் விமானி உள்பட 4 கடலோர காவல் படையினர் இருந்தனர். அலிபாக் கடல்பகுதியில் நடுவானில் பறந்து சென்று கொண்டு இருந்தபோது, திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து புறப்பட்ட 25 நிமிடங்களில் பிற்பகல் 2.48 மணியளவில் ஹெலிகாப்டர் ராய்காட் மாவட்டம் முர்டு, நந்த்காவ் கிராம கடற்கரை பகுதியில் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட பகுதி பாறைகளால் நிறைந்து கரடு முரடாக இருந்தது. எனவே ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்தது. மேலும் அதில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர்களில் மீட்பு பணியில் இறங்கினர். இதில் அவர்கள் சேதமடைந்து கிடந்த ஹெலிகாப்டரில் இருந்த 4 கடலோர காவல் படையினரையும் பத்திரமாக மீட்டனர். 4 பேரும் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கடற்படை ஆஸ்பத்திரியான அஸ்வினிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் தான் ஒ.என்.ஜி.சி. ஊழியர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, அதில் இருந்த 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story