கோலாரில் பட்டிக்குள் புகுந்து 30 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை
கோலாரில் பட்டிக்குள் புகுந்து 30 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோலார் தங்கவயல்,
கோலார் தாலுகாவில் உள்ள கேலனூரு கிராமத்தை சேர்ந்தவர் ராமுஜி. விவசாயியான இவர் வீடு வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. ராமுஜி சொந்தமாக 100 ஆடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை தனது வீட்டின் பின்பு பட்டி அமைத்து பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை ஆட்டுபட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்தது. இதனால் ஆடுகள் கத்தின. இந்த சத்தத்தை கேட்டு ராமுஜி வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை, ஆடுகளை கடித்துக் கொன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுத்தையை கல்லால் தாக்கி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதையடுத்து ராமுஜி பட்டிக்குள் சென்று பார்த்தார்.
அப்போது சிறுத்தை கடித்து குதறியதில் 30 ஆடுகள் செத்து கிடந்தன. மேலும் 10 ஆடுகள் படுகாயம் அடைந்து இருந்தன. படுகாயம் அடைந்த ஆடுகளை ராமுஜி கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோலார் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து செத்து கிடந்த 30 ஆடுகளை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், ராமுஜிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை வனத்துறையினரும் ஏற்றுக் கொண்டனர்.

Related Tags :
Next Story