ஏழைகளுக்கு உதவ இசைச் சேவை..
உச்சி வெயிலில் வியர்வைக்குள் நனைந்தபடி பாட்டுப்பாடி, ஏழைகளுக்கு உதவ இசைச் சேவை செய்துகொண்டிருக்கிறார், பிரியா சுமேஷ்.
உச்சி வெயிலில் வியர்வைக்குள் நனைந்தபடி பாட்டுப்பாடி, ஏழைகளுக்கு உதவ இசைச் சேவை செய்துகொண்டிருக்கிறார், பிரியா சுமேஷ். ஏழை நோயாளிகளுக்கு பண உதவி பெற, மக்கள் கூடும் இடங்களை தேர்ந்தெடுத்து பாடுகிறார் இவர். அதற்காக ஒரு வேனை பயன்படுத்துகிறார்.
காலை நேரத்தில் மக்கள் கூடும் இடங்களில் அந்த வேன் போய் நிற்கிறது. அதன் வெளிப்பகுதியில் மருத்துவ சிகிச்சைக்கு யாருக்கு பணம் தேவையோ அவரைப் பற்றிய விவரம் அடங்கிய பேனர், போட்டோவுடன் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது நோயை பற்றிய முழுவிவரமும், அதற்கு தேவைப்படும் பணத்தை பற்றிய குறிப்பும் இருக்கிறது. வேனில் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. வேனை ஓரமாக நிறுத்திக்கொண்டு மைக்கை பயன்படுத்தி பிரியா பாடத் தொடங்குகிறார். இனிமையான அவரது பாடல் வெகுதூரம் வரை கேட்கிறது.
வேனில் ஒட்டப்பட்டிருக்கும் விவரத்தை படித்துவிட்டு, பாட்டை கேட்டுவிட்டு மக்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்கிறார்கள். அந்த பணம், நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு போய் சேருகிறது. இப்படி இசைச் சேவை செய்து வரும் பிரியாவும் ஒரு நோயாளி தான். ‘பிட்யூட்டரி அடினோமா’ எனப்படும் மூளையில் கட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், அந்த வேதனையையும் தாங்கிக்கொண்டு இப்படி ஒரு சமூக சேவையை செய்துகொண்டிருக்கிறார்.
தனது நோய் பாதிப்புகளையும் தாங்கிக்கொண்டு இவர் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது பாட என்ன காரணம்?
“எனது அக்காள் புற்றுநோயால் இறந்துபோனார். இருந்ததை எல்லாம் விற்று எனது பெற்றோர் அவளுக்கு சிகிச்சை செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரும், சிகிச்சைக்கு செலவு செய்தே இருந்த அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள். அப்படி ஏழையாகி தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். நானும் ஒரு நோயாளியாகிவிட்டதால் இந்த சேவையில் மனப்பூர்வமாக ஈடுபடுகிறேன்” என்கிறார்.
பிரியா முறைப்படி பாட்டு கற்றவர் இல்லை. ஆனாலும் இவர் இதயபூர்வமாக பாடுவதால், எல்லோரையும் இவரது குரல் ஈர்த்துவிடுகிறது. தெருவில் நின்று இவர் பாடுவதை யாரோ வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்கள். அது மக்கள் மத்தியில் பிரியாவுக்கு பெரும் செல்வாக்கை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது.
“நான் சிறுவயதில் இருந்தே தெருவில் நின்று பாடுபவர்களை கவனிப்பேன். அவர்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் இருக்காது. அதனால் அவர்களோடு சேர்ந்து ஒரு பாடலைப்பாடுவேன். அதனால் தெருவில் பாடுவது எனக்கு பிடித்தமானதாகிவிட்டது. நான் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவள். எனது கணவர் சுமேஷ் கொச்சியை சேர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு பின்பு அங்கு சென்று விட்டேன். அங்கு ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது கணவர் டிரைவராக வேலைபார்க்கிறார். அவர்தான் எனக்கு முழு ஒத்துழைப்பு தரு கிறார். பாடத் தெரியாத அவரும் இப்போது என்னோடு சேர்ந்து பாடுகிறார்.
தினமும் எங்கள் பழைய வேனில் பயணத்தை தொடர்கிறோம். அதில் சவுண்ட் சிஸ்டத்தை வாடகைக்கு வாங்கிவைத்திருக்கிறோம். எங்கள் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தை நோக்கி, காலை 11 மணிக்கு செல்வோம். குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பாடத் தொடங்குவதற்கு 12 மணியாகிவிடும். இரண்டரை மணி வரை பாடுவோம். பின்பு மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினால் இரவு 8 மணிக்கு முடிப்போம். பாடிவிட்டு ஒவ்வொருவரிடமும் போய் பணம் கேட்கமாட்டோம். பாட்டை கேட்டுவிட்டு, வேனில் இருக்கும் குறிப்புகளையும் படித்துவிட்டு, அவர்களாக முன்வந்து கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்வோம். நாங்கள் சோஷியல் மீடியாவில் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கிடைத்தது? எந்த நோயாளிக்காக பாடுகிறோம்? என்ற விவரங்களை எல்லாம் தினமும் ‘ஷேர்’ செய்துவிடுவோம்.
எல்லா துறைகளிலும் ஏமாற்றுவதுபோல் இந்த துறையிலும் சிலர் ஏமாற்றத்தான் செய்கிறார்கள். பாட்டு மூலம் கிடைத்த பணத்தை, சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். இறந்தவர்களின் படத்தைவைத்தும் பணம் வசூலிப்பார்கள். எங்களையும் அப்படி நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வசூலிக்கும் விவரம் அனைத்தையும் அன்றன்றே பதிவிட்டுவிடுகிறோம்” என்று கூறும் பிரியா, இதுவரை யாருக்கெல்லாம் உதவியிருக்கிறார் என்ற பட்டியலையும் வாசிக்கிறார்.
“ஒரே ஒருவருக்கு உதவி செய்துவிட்டு இந்த சேவையை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்துதான் ஆரம்பித்தோம். ஆனால் உதவி கேட்டு தொடர்ந்து பலர் வருவதால் அவர்களை நிராசையாக்க மனமின்றி தொடர்ந்து இதை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது ரத்த புற்றுநோயால் பாதித்த ஆர்யா பாபு என்ற குழந்தைக்காக பாட்டுப்பாடி பணம் வசூலிக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் வரை சேர்ந்திருக்கிறது” என்று கூறும் பிரியா, பாடுகின்ற இடங்களில் பல்வேறு பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு இடத்திலும் போலீசிடம் அனுமதி பெற்றே பாடுகிறார். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்றும் இவர் பாடி வருகிறார். ஆல்பங்கள், குறும்படங்கள், சினிமாவில் நடித்திருக்கவும் செய்திருக்கிறார்.
“எனக்கு ஏற்பட்டிருக்கும் நோயை பற்றி விளக்கிய டாக்டர் எனது குரல் திடீரென்று நின்றுபோய்விடும். பார்வையும் இல்லாமல் போய்விடும். அதனால் ஆபரேஷன் செய்துகொள்ளவேண்டும் என்றார். டாக்டர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டால் தலைசுற்றலும் சோர்வும்வரும். அதனால் மூன்று வருடங்களாக சாப்பிட்டு வந்த மாத்திரைகளையும் நிறுத்திவிட்டேன். இப்போது ஓமியோபதி மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று பாடிக்கொண்டிருக்கிறேன்..” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார், பிரியா.

Related Tags :
Next Story