பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்பட 253 பேர் கைது செய்யப்பட்டனர்.
துடியலூர்,
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள தமிழக-கேரள எல்லையில் நேற்று பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். இதில் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 6 தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு, அதில் தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய 2 இடங்களில் தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டது. சோலையூர் குடப்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குறுக்கே 3-வது தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பலவீனமான அரசாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் அமைதி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரளா பகுதியில் 21 கி.மீ. தூரம் பாய்ந்து மீண்டும் தமிழகத்திற்கு வருகிறது. இந்த 21 கி.மீ. தூரத்திலேயே 6 தடுப்பணைகள் கட்டி னால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 2½ லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும். அத்துடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். கொங்கு மண்டலத்தில் 60 ஆண்டுகால கனவு திட்டமான அவினாசி-அத்திகடவு திட்டம் கானல் நீராக மாறி விடும்.
பவானி ஆற்றில் இருந்து கேரளா 6 டி.எம்.சி. தண்ணீரை தான் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி கேரளா 13 டி.எம்.சி. தண்ணீரை எடுத்து வருகிறது. மேலும் சிறுவாணி ஆற்றில் முக்காலியில் தடுப்பணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்தபோது, தமிழகத்தின் அனைத்து கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங் களுக்குள் அமைக்க வேண்டும். ஆனால் 3 வாரங்கள் கழிந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலவரம்பு இல்லை என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்ட போது நேரம் வழங்காமல் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்திக்கும் படி கூறியது தமிழகத்தை அவமதிப்பது ஆகும். எனவே தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.
அதுபோன்று பரம்பிக்குளம், ஆழியாறு திட்டத்தில் இருமாநில ஒப்பந்தத்தின்படி கேரளா கூடுதல் தண்ணீர் கேட்டு தமிழக அரசை நிர்பந்தம் செய்து வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் அணை கட்ட ஆந்திரா முயற்சி செய்கிறது. இப்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பலவீனமான அரசை பயன்படுத்தி தமிழகத்துக்கு வரும் நீர் ஆதாரத்தை தடுக்கின்றன.
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பிரச்சினைக்கு தீர்வு காண, கேரள அரசுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அத்துடன் சட்டப்படியான நடவடிக் கையையும் மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் பா.ம.க. சார்பில் இளைஞர்களை ஒன்று திரட்டி தடுப்பணை கட்டும் இடத்துக்கு சென்று, அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆனைக்கட்டியில் இருந்து தடுப்பணை கட்டப்படும் இடத்துக்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி உள்பட 253 பேரை கைது செய்தனர்.
இதில் மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ரகுபதி, தங்கவேல்பாண்டியன், மன்சூர், விசாலாட்சி, ஆறுமுகம், பரமசிவம், ஆலயமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story