காவிரி மேலாண்மை வாரியம்: எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிடாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி உள்ளதே? அது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டையும் 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக அவை முடங்கும் அளவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
கேள்வி:-காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவோம் என்கிறீர்களே? எந்த வகையில் நிலை நாட்டுவீர்கள்?
பதில்:- ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. மத்திய அரசு நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி மத்திய அரசு 6 வார காலத்துக்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு 4 மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதில் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறி உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு வழங்கி உள்ளதோ அந்த தீர்ப்பின் அடிப்படையில் 6 வாரத்துக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகத்தின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் தெளிவாக நமது நிலைப்பாட்டை எடுத்து வைத்துள்ளனர்.
கேள்வி:- காவிரி பிரச்சினையில் தமிழக அரசு உரிய முறையில் வாதாடவில்லை என வைகோ குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- தமிழகம் வாதாடவில்லை என்று கூறுவது தவறு. தமிழகத்தின் சார்பில் 13 நாட்கள் வாதாடி உள்ளோம். முக்கியமான பிரச்சினைகள் எடுத்து கூறப்பட்டுள்ளது. தீர்ப்பை விமர்சிக்க முடியாது. நம்முடைய வாதங்கள் முழுமையாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. வேண்டும் என்றே அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுவது சரியல்ல. நம்முடைய உரிமைகள் என்ன என்பதை நம்முடைய வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதத்தின் போது எடுத்து வைத்துள்ளனர். அதை யாரும் குறை சொல்ல முடியாது.
கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே ஸ்டாலின் கூறியிருந்தது போல் தற்போது கமல்ஹாசனும் வலியுறுத்தி உள்ளாரே?
பதில்:- எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கே இன்னும் தீர்வு கிடைக்க வில்லை. அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டுவது சரியல்ல. ராஜினாமா செய்வதால் மட்டும் பிரச்சினைக்கு முடிவு கிடைத்து விடாது.
2007-ல் நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. அப்போது மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி பதவி வகித்தது. மத்தியிலும் தி.மு.க. ஆட்சியில் அங்கம் வகித்தது. மாநிலத்திலும், மத்தியிலும் அவர்கள் அதிகாரத்தில் இருக்கின்றபோதே இதற்கு தீர்வு கண்டு இருந்தால் இந்த பிரச்சினையே வந்து இருக்காது. அப்போதெல்லாம் கோட்டைவிட்டு விட்டு மற்றவர்கள் மீது பழிபோடுவது சரியல்ல. அ.தி.மு.க. அரசு சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை. அதற்காக தமிழக அரசு பாடுபடும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்காக தொடர்ந்து போராடுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Tags :
Next Story