போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8,679 பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 679 பேர் எழுதினர். இதில், 956 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தூத்துக்குடி,
தமிழகத்தில், 2017–18–ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த 2–ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கான புதிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு நேற்று காலை நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 8 ஆயிரத்து 466 ஆண்கள், 1,167 பெண்கள், 2 திருநங்கைகள் ஆக மொத்தம் 9 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக தூத்துக்குடியில் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களுக்கு நேற்று காலை முதலே விண்ணப்பதாரர்கள் அதிக அளவில் வந்து காத்து இருந்தனர். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவராக பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் 8 ஆயிரத்து 679 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 956 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வு பணியை தொழில்நுட்ப பிரிவு போலீஸ் ஐ.ஜி. அசோக்குமார்தாஸ் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணித்தனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்கு விரைவாக செல்வதற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Tags :
Next Story