மத்திய அரசின் சூழ்ச்சிக்கு, தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது - வைகோ குற்றச்சாட்டு
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க போவதில்லை. மத்திய அரசின் இந்த சூழ்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
மதுரை,
மதுரையில் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
காவிரி நடுவர் மன்றத்தில், தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு சகோதரி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். ஆனால் அரசிதழில் வெளியிட்டும், அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை. அதன் தொடர்ச்சியாக ஆட்சிப்பொறுப்பேற்ற மோடியை சந்தித்த ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போதும் அவர்கள் அதனை அமைக்க வில்லை. அதன்பின் சுப்ரீம் கோர்ட்டும் 4 நாட்களில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகு, முதலில் ஒத்து கொண்ட மத்திய அரசின் தலைமை வக்கீல் முகுல்ரோத்கி, அதன்பின் திரும்ப வந்து கோர்டில் நீங்கள் இதையெல்லாம் சொல்ல முடியாது, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார். பக்ரா, பியாஸ், நர்மதா, கோதாவரி போன்றவற்றிற்கு மேலாண்மை வாரியம் அமைத்திருக்கிறார்கள். ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறுவது சரியா?.
காவிரி வழக்கில் கர்நாடக தரப்பில் ஆஜரான வக்கீல் பாலிமன் நாரிமன் தந்திரத்தால் நமக்கு வேட்டு வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. கடந்த காலத்தில் வழக்கின் போது ஜெயலலிதா வக்கீல்களுடன் அடிக்கடி பேசி ஆலோசனை வழங்குவார். ஆனால் தற்போது தமிழக அரசின் வக்கீல்கள் சரியாக வாதாட வில்லை. ஆண்டுக்கு ஒரு வக்கீலை மாற்றி வருகிறார்கள். இதனாலேயே நாம் பலவீனம் அடைந்து விட்டோம்.
சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டிற்கு விரோதமான, சட்டவிதிகளுக்கு மாறான, அநீதியான தீர்ப்பை வழங்கி உள்ளது. மோடி தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார். இதற்கு கர்நாடகவில் நடைபெற உள்ள தேர்தல் மட்டும் காரணம் அல்ல. தமிழ்நாட்டின் இயற்கை வாழ்வாதாரங்களை அழித்து விட்டால், இந்த தமிழ் உணர்வு அழிக்கப்படும். சில ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி விடுவார்கள். அதன்பின் தமிழகம் பஞ்ச பிரதேசம் ஆகிவிடும். மோடி நமது முதுகெலும்பை ஒடிக்க பார்க்கிறார். எச்.ராஜா பெரியார் குறித்து திரும்ப, திரும்ப பேசுவதற்கு மோடியும், அமித்ஷாவும் தான் ஊக்கம் தருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எவ்வளவு பெரிய பதவியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எங்கள் மீது தலையில் கல்லை போட்டு இருக்கிறீர்கள். இதற்கு என் மீது கோர்ட்டு அவமதிப்பு வந்தாலும் பரவாயில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் அணை கட்ட முடியாது. அதற்காக தான் இந்த வாரியம் அமைக்க வில்லை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, மோடியின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. இனி அங்கு அணை கட்ட போகிறார்கள். மேலாண்மை வாரியம் அமைக்க போவதில்லை. மத்திய அரசின் சூழ்ச்சிக்கு, தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் காவிரி தொடர்பாக செயல்திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், அதனை பாராளுமன்றம் சீரமைத்து கொள்ளலாம் என்றும் சொல்லி நமது கழுத்தை அறுத்து விட்ட்டார்கள். இதனை அனைத்து கட்சி கூட்டத்தில் நான் கூறினேன். அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்று பித்தலாட்டமான வார்த்தையை தமிழக அரசு சொல்லி இருக்கிறது. மத்திய அரசின் நீர் ஆணையத்தை சேர்ந்த ராவ், மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம். செயல்திட்டம் தான் அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில அரசு உண்மையை சொல்ல வேண்டாமா? தமிழகம் வஞ்சிக்கப்பட்ட விஷயத்தை எடுத்துரைக்க வேண்டாமா? இந்த விவகாரத்தில் நமக்கு ஒரு வழிதான் உண்டு. அரசியல் சாசன பெஞ்சுக்கு செல்ல வேண்டும். நல்ல வக்கீல்களை நியமிக்க வேண்டும்.
இப்போது தமிழகத்தில் இருந்து மீத்தேன், ஹட்ரோ கார்பன் போன்றவற்றை எடுக்க மத்திய அரசு தனது பணியினை தொடங்கி விட்டது. இங்கு 2 லட்சத்து 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் விளை நிலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசும் அனுமதி தந்துள்ளது. இதனைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மோசமாக கொல்லப்பட்டதற்கு தான் வருந்துவதாக ராகுல்காந்தி சொன்னது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை ராகுல் காந்தி மன்னித்து விட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன் போன்றவர்கள் குற்றவாளிகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story