குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது தவணையாக குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட ஆயிரத்து 362 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை காமராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுக்கோட்டை நகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு தாய்மார்களின்் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தது போல எவ்விதமான நோயாக இருந்தாலும் அவற்றை 100 சதவீதம் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பருவக்கால மாற்றத்தினால் உலக அளவில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தாலும் தமிழகத்தில் நோய்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு புறம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டும். மறுபுறம் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் ஏற்பட்டால் உலக தரமான சிகிச்சை வழங்கப்பட்டும் வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தொலைத்தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story