மதுரை–திண்டுக்கல் உள்ளிட்ட பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


மதுரை–திண்டுக்கல் உள்ளிட்ட பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 12 March 2018 3:15 AM IST (Updated: 12 March 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

மதுரை–திண்டுக்கல் உள்ளிட்ட பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக 10–ந் தேதி (நேற்று) முதல் ஒரு பெட்டி கூடுதலாக நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

அதன்படி, மதுரை–திண்டுக்கல் பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56708) ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.

திண்டுக்கல்–திருச்சி பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56704) ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.

திருச்சி–பாலக்காடு டவுன் பாஸ்ட் பாசஞ்சர் ரெயிலில் (வ.எண்.56713) ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

மறு மார்க்கத்தில் பாலக்காடு டவுன்–திருச்சி பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56712) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.

திருச்சி–காரைக்கால் பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56714) நாளை(திங்கட்கிழமை) முதல் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.

காரைக்கால்–திருச்சி பாசஞ்சர் ரெயிலில்(வ.எண்.56711) நாளை முதல் ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுகிறது.

திருச்சி–திண்டுக்கல் பாசஞ்சர ரெயிலில்(வ.எண்.56703) ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

திண்டுக்கல்–மதுரை பாசஞ்சர் ரெயிலில் வருகிற 14–ந் தேதி முதல் ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story