ஊரப்பாக்கம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அம்பிகா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று விடியற்காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story