அய்யம்பாளையத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
அய்யம்பாளையத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்,
அய்யம்பாளையம் பேரூராட்சி 15–வது வார்டில் சூரியங்குளம் என்ற தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அய்யம்பாளையம் ஸ்டேட் வங்கியில் இருந்து சூரியங்குளம் வழியாக தாண்டிக்குடி ரோடுவரை உள்ள 1 கி.மீ. தூரம் தார்சாலை உள்ளது. இந்த தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. சாலை முழுக்க கற்கள் பெயர்ந்து மண்சாலைகளாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story