திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வை 9 ஆயிரத்து 519 பேர் எழுதினர்.
திருவண்ணாமலை,
தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில், நேற்று 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,506 பெண்கள் உள்பட 10 ஆயிரத்து 594 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக திருவண்ணாமலை நகரில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணி முதல் 11.20 மணி வரை தேர்வு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை 9 ஆயிரத்து 519 பேர் எழுதினர். 1,075 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 29 இன்ஸ்பெக்டர்கள், 126 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் ஈடுபட்டனர். தேர்வு மையங்கள் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை தலைவரும், குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.யுமான சுமிர்சரண் தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல போதிய பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story