காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரியார், லெனின் படங்களுடன் அரசியல் கட்சியினர் ஊர்வலம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரியார், லெனின் படங்களுடன் அரசியல் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 12 March 2018 4:30 AM IST (Updated: 12 March 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரியார், லெனின் படங்களுடன் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்கள் சார்பில் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு தி.க. மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், நகர செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் காந்திஜி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெரியார் மற்றும் லெனின் படங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.


காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். பெரியார் சிலையை உடைத்தெறிவோம் என பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜாவை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், நகர அவைத்தலைவர் ஆறுமுகம், மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி, தி.க.வை சேர்ந்த அய்யனார், முருகேசன், வெற்றி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவி.மோகன், ம.தி.மு.க. பேச்சாளர் விடுதலைவேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story