இரு குடும்பத்தினர் இடையே மோதலில் ஒருவர் கொலை
வீட்டின் முன்பு கழிவு நீர் தேங்கியதால் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்தவர் நயன்தேவ் ரானே (வயது35). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுரேஷ் மாத்ரே. கடந்த 3-ந் தேதி நயன்தேவ் ரானே வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்கி இருந்தது. இது தொடர்பாக அவர் சுரேஷ் மாத்ரேவிடம் கூறி வாக்குவாதம் செய்தார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற் பட்டது. இந்த தகராறில் சுரேஷ் மாத்ரேவின் குடும்பத்தினர்கள் சேர்ந்து நயன்தேவ் ரானேவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நயன்தேவ் ரானே குடும்பத்தினர் அவர்களை தாக்க தொடங்கினர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே தகவல் அறிந்த ஹில்லைன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் நயன்தேவ் ரானே உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேரும், சுரேஷ் மாத்ரே குடும்பத்தில் 3 பேரும் காயமடைந்தனர். பின்னர் போலீசார், காயமடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி நயன்தேவ் ரானே பலியானார். இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அவரை தாக்கியதாக சுரேஷ் மாத்ரே மற்றும் அவரது சகோதரர்களான பிரமோத் மாத்ரே, நித்தின் மாத்ரே ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story