தியேட்டர் உள்பட 7 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைப்பு


தியேட்டர் உள்பட 7 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 12 March 2018 4:14 AM IST (Updated: 12 March 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

கோடிக்கணக்கில் சொத்து வரி பாக்கி வைத்திருந்த தியேட்டர் உள்பட 7 கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு ஆக்ட்ராய் வரி மூலம் அதிக வருவாய் கிடைத்து வந்தது. ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததையடுத்து ஆக்ட்ராய் வரி ஒழிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சியின் வருவாய் குறைந்தது. எனவே அவர்கள் சொத்து வரியை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகளவில் சொத்து வரி பாக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் மாநகராட்சியினர் பல கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருந்த இந்துஜா ஆஸ்பத்திரியின் நிர்வாக அலுவலகத்தை மூடி ‘சீல்’ வைத்தனர்.

இந்தநிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்திருந்த தியேட்டர் உள்பட 7 கட்டிடங்களை அதிரடியாக இழுத்து மூடி ‘சீல்’ வைத்துள்ளனர். அந்த இடங்கள் வருமாறு:-

நேப்பியன் சீ ரோடு ஆஷியானா கட்டிடம் (ரூ.8 கோடி வரி பாக்கி), கோரேகாவ் ரிலையபல் கட்டிடம் (ரூ.4.6 கோடி வரி பாக்கி), ஆரேரோடு சன்சயின் கட்டிடம் (ரூ.4 கோடி), குர்லா எச்.டி.ஐ.எல். கட்டிடம் (ரூ.4.5 கோடி), தேவ்னார் தொழிற்பேட்டை கட்டிடம் (ரூ.2 கோடி), கார் டிவிலைட் கட்டிடம் (ரூ.90 லட்சம்), கிராண்ட் ரோடு நாஸ் தியேட்டர் (ரூ.4 கோடி). 

Next Story