தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி கிளை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். அந்தோணி ராஜ், வெள்ளைச்சாமி, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் முனியசாமி, மாநகர செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.624.16 வழங்கப்பட வேண்டும். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி, சுயஉதவிக்குழு ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக அடிப்படை ஊதியம் ரூ.500–ம், பஞ்சப்படி ரூ.124.16–ம் சேர்ந்து ரூ.624.16 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் மாவட்ட கலெக்டரிடம் தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதில் முன்னாள் கவுன்சிலர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story