‘நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி மாணவர்கள்’ பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பேச்சு


‘நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி மாணவர்கள்’ பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பேச்சு
x
தினத்தந்தி 13 March 2018 3:00 AM IST (Updated: 13 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி மாணவர்கள் என்று அழகப்பா அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா, உமையாள் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி இங்கர்சால் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக கல்லூரி முதல்வர் முத்தம்மை வரவேற்றார். பின்னர் விழாவில் விஞ்ஞானி இங்கர்சால் தனது உரையில் கூறியதாவது:-

கல்லூரி கல்வியில் பட்டம் பெறும் மாணவ-மாணவிகள், படிப்பு முடிந்தவுடன் சமுதாயத்தில் வாழ்க்கை என்ற பட்டத்தை கற்க தயாராக வேண்டும். அதில் மாணவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இன்று வெற்றிகரமான பட்டதாரியாக வாழ்க்கையினை எதிர்கொள்ள போகும் மாணவர்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற்று எதிர்கால வாழ்க்கையினை சிறப்பாக்கி கொள்ள வேண்டும். அத்துடன் படிப்பு மூலம் பெற்ற அறிவினை பயன்படுத்தி கனவுகளை மெய்ப்பிக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி மாணவர்களே. எனவே தொடர்ச்சியாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தினசரி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் இளங்கலை, முதுகலை, எம்.பில் படிப்புகளில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரத்து 18 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 

Next Story