மோட்டார்சைக்கிள் விபத்து: மனைவி பரிதாப சாவு; தொழிலாளி படுகாயம் 7 மாத குழந்தை உயிர் தப்பியது
சங்கரன்கோவில் அருகே, மோட்டார்சைக்கிள் விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார். அவர்களது 7 மாத குழந்தை உயிர் தப்பியது.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஜே.டி. நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 33), கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி உமா (30). இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் தங்களது 7 மாத கைக்குழந்தையுடன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியம்பட்டி கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அவனிக்கோனேந்தல் விலக்கு அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது 7 மாத கைக்குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.
செல்வம் மற்றும் உமா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில், உமா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் பலத்த காயமடைந்த செல்வத்தை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 7 மாத கைக்குழந்தை அதிர்ஷடவசமாக சிறிய சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜே.டி.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story