பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம்,
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை சேமித்து வைத்து, தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி இந்த ஏரிக்கு ஜனவரி 2-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது கண்டலேறு அணையில் 6.98 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பு உள்ளது.
அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு வெறும் 700 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த தண்ணீர் நேற்று காலை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 114 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது.
பூண்டி ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 31.15 அடியாக பதிவானது. 2,018 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கடந்த 27-ந்தேதி முதல் லிங்க் கால்வாய் மூலமாக வினாடிக்கு 175 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 300 கனஅடி வீதம் என தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 19 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Tags :
Next Story