கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூர் கடற்கரை சாலையில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
பழவேற்காடு அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 31). இவர் பாரிமுனையில் உள்ள ஒரு கன்டெய்னர் கம்பெனியில் குமாஸ்தாவாக வேலைபார்த்து வருகிறார்.
இவர் நேற்று காலை பாரி முனைக்கு வேலைக்கு செல்வதற்காக திருவொற்றியூர் கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நல்ல தண்ணீர் ஓடைகுப்பம் அருகே சாலையில் இரு புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிகளுக்கு இடையே சென்ற போது, சாகுல் அமீதின் மோட்டார்சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சாகுல் அமீதுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள், சாலையின் இருபுறங்களிலும் நிறுத்திவைக்கப்படும் கன்டெய்னர் லாரிகளால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
எனவே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆவேசமாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதற்கிடையே சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி, சாகுல் அமீதை அந்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, போலீசாரின் வாக்குறுதியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story