மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 13 March 2018 4:00 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வளர் இளம் பருவத்தினர் மது பழக்கத்தில் சிக்கி வாழ்க்கையில் பாதிப்புக்குள்ளாவது பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தொடங்கி வைத்தார். பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலமானது காமராஜர் வளைவு, சங்குபேட்டை, ரோவர் ஆர்ச் சிக்னல், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது, மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும், குடிப்பழக்கத்தினால் உடலுக்கு ஏற்படும் தீங்கு உள்ளிட்டவை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடியே மாணவ-மாணவிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஊர்வலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story