தலையில் கல்லைப்போட்டு மீன் பிடிக்கும் தொழிலாளி படுகொலை
கெலமங்கலம் அருகே தலையில் கல்லைப்போட்டு மீன் பிடிக்கும் தொழிலாளி படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 52). இவர் அளேசீபத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மீன்பிடிப்பதற்காக தனது மொபட்டில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று கெலமங்கலம் அருகே உள்ள காளிநாயக்கனப்பள்ளி பக்கமுள்ள சின்னாறு அணை கால்வாயையொட்டி உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் ராமதாஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் யாரோ சில மர்ம ஆசாமிகள் கல்லை தூக்கி போட்டு கொன்றுள்ளனர். அவரது உடல் கிடந்த இடத்தின் அருகிலேயே ராமதாசின் மொபட் இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து கொலை நடந்த இடத்திற்கு கிருஷ்ணகிரியில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ரேஷ்மி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல கிருஷ்ணகிரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட ராமதாஸ் அந்த பகுதியில் வலை விரித்து மீன் பிடிப்பது வழக்கம். அப்போது அவருக்கும், வேறு யாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அதனால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை தொடர்பாக பச்சனப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராகவேந்திரன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட ராமதாசிற்கு பாக்கியா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த கொலையில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் கெலமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story