காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் வாலிபரை கைது செய்ய விடாமல் தடுத்த மீனவ கிராம மக்கள்
காங்கிரஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் வாலிபரை கைது செய்ய விடாமல் கிராம மக்கள் தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன்(வயது 55). காங்கிரஸ் பிரமுகர். புதுவை அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரை கடந்த 6-ந் தேதி இரவு ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தது. இது குறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவருடைய மனைவி திலகா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே மாறன் கொலை வழக்கு தொடர்பாக புதுவை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் செட்டிப்பாளையம் ராஜசேகரன் (27), நெல்லிதோப்பு மணிகண்டன் (30), வில்லியனூர் காண்டீபன் (39), நொச்சிக்குப்பம் ஞானசேகரன் (25) ஆகிய 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குருசுக்குப்பம் பிரபாகரன்(20), மரவாடி பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19) ஆகியோர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த சுகு என்ற சுகுமாறன் (35), சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி (29), உதயா என்ற ராதாகிருஷ்ணன் (24), சீர்காழி பகுதியை சேர்ந்த அஜித் (22) ஆகிய 4 பேரையும் தமிழக பகுதியில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான மூர்த்தி, அவருடைய மனைவி திலகா மற்றும் வினோத்(26) ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வினோத் என்பவர் குருசுக்குப்பம் மரவாடி தெருவில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் தனிப்படைபோலீசார் குருசுக்குப்பம் மரவாடிதெருவிற்கு சென்று வினோத்தின் வீட்டை சுற்றி வளைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பெரியமார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வினோத்தின் தாயாருக்கு தெரியவந்தது. உடனே அவர் அங்கு வியாபாரம் செய்யும் 50க்கும் மேற்பட்ட மீனவ பெண்களுடன் சேர்ந்து தனது வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவர்கள் வினோத்தை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வினோத்திற்கு தற்போது அம்மை போட்டிருப்பதாகவும், சில சடங்குகள் செய்து 2 நாட்கள் கழித்து தாங்களே வந்து போலீசாரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு போலீசார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மீனவ கிராம மக்கள் பலர் அங்கு ஒன்று கூடினர். உடனே ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வினோத் தப்பி செல்லாமல் இருக்க அவரது வீட்டின் அருகில் உள்ள மாடிகளில் ஏறி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசாருடன், கிராம பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வினோத்தை கைது செய்து அழைத்து செல்லும்போது மீனவ பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் கூடவே வருவார்கள் என்றும், போலீஸ் நிலையத்தில் வைத்து அவரை அடிக்காமல் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை வரை நடந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்யாமல் அங்கிருந்து திரும்பி வந்தனர். மேலும் அவர் தப்பி செல்லாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story