அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2018 2:45 AM IST (Updated: 13 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணியிடங்களை குறைக்கின்ற அரசணை எண் 56–ஐ கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவினாசி,

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசு பணி நியமனத்தை அவுட்சோர்ஸ் முறைக்கு கொண்டு வரும் அரசு பணியிடங்களை குறைக்கின்ற அரசணை எண் 56–ஐ கண்டித்து அவினாசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டகிளை இணைச்செயலாளர் சுமதி தலைமை தாங்கினார். வட்டக்கிளை செயலாளர் கருப்பன் விளக்கவுரையாற்றினார். மாவட்ட இணை செயலாளர் ராமன்,வட்டக்கிளை பொருளாளர் குகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story