தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, துணை செயலாளர்கள் பேர்நீதிஆழ்வார், அன்பு, மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு 1 நாள் ஊதியம் ரு.432.16 அடிப்படையில் மாதம் ரூ.11 ஆயிரத்து 236 ஊதியமாக வழங்க வேண்டும். ஏப்ரல் மாத ஊதியம் வழங்கும் போது 11-10-2017 முதல் ஊதிய உயர்வு நிலுவைத்தொகைகளையும் சேர்த்து வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளுக்கு வித்தியாசமில்லாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பெரும்பாலான ஊராட்சிகளில் இதுவரை வழங்கப்படாமல் உள்ள பொங்கல் போனசை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.1 லட்சமும், ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். அதில், தஞ்சை மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.624.16 வீதம் மாதம் ரூ.16 ஆயிரத்து 228 வீதம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே அரசு உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story