திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
ஓய்வு பெற்ற ஜ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்புக்குழு அரசாணை எண்.56 ஏற்படுத்தப்பட்டு, தேவையற்ற அரசு பணியிடங்களை கண்டறியப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ளவும், தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையினால் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு முற்றிலும் பெற முடியாத நிலையினை ஏற்படுத்துவதுடன், ஏற்கனவே பணிபுரிகின்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்படும். எனவே அரசாணை 56-யை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பைரவநாதன் கலந்து கொண்டு பேசினார். இதில் வட்ட பொருளாளர் மகாலிங்கம், நிர்வாகிகள் தம்பிதுரை, குணசேகரன், தெட்சிணாமூர்த்தி, முருகபாண்டி, ரமேஷ், சுபலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசாணை எண் 56-யை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story