குறைதீர்வு நாள் கூட்டத்தில் மணலை பூசியபடி மனு கொடுக்க வந்த இயக்கத்தினரால் பரபரப்பு
ஆரணி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி நூதன முறையில் மனு கொடுக்க வந்த சக்திசேனா இயக்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பானுமதி, மகளிர் திட்டங்களுக்கான திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா தென்அரசம்பட்டு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்அரசம்பட்டு பகுதியில் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டு உள்ள நிலத்திலும், கிரையம் பெற்ற நிலத்திலும் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.
மேலும் இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் தென் அரசம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 45 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்த பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆரணி தாலுகா தச்சூர் கிராமத்தில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாநில கொள்ளை பரப்பு செயலாளர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட தலைவர் செந்தில் முன்னிலையில் மனு அளிக்க வந்தனர்.
அதில் மாவட்ட இணை செயலாளர் விஜி என்பவர் உடலில் எண்ணெய்யுடன் மணலை பூசிக்கொண்டு நூதன முறையில் வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “ஆரணி தாலுகா தச்சூர் பாலாற்றில் இரவு நேரங்களில் லாரி, டிராக்டர் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது. இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இரவு பகலாக லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது. இதையடுத்து மீண்டும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 26-ந் தேதி மனு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக எங்களுக்கு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
உடலில் மணலை பூசிக் கொண்டு நூதன முறையில் அவர்கள் வந்தது கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story