விவசாயிகளை ஏமாற்ற அரசு சதி செய்கிறது சிவசேனா சொல்கிறது
பேரணியில் வந்த விவசாயிகளை ஏமாற்ற அரசு சதி செய்வதாக சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
விவசாயிகள் பேரணிக்கு ஆளும் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா ஆதரவு தெரிவித்தது.
இதுகுறித்துஅக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபடுபவர்களை தற்காலிகமாக குழப்புவதற்காக சில மந்திரிகள் விவசாயிகளை சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து சதி செய்ய வாய்ப்புள்ளது.
விவசாய அமைப்புகள் இந்த சூழ்ச்சிகளுக்கு பலியாக வேண்டாம்.
விவசாயிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிகப்பு ெகாடியை ஏந்தி பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு எப்படி சிவசேனா ஆதரவு அளிக்கிறது என்று கேள்வி எழுகிறது.
அவர்களுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மராட்டியம் என்ற மாநிலத்தை உருவாக்கியதில் அவர்கள் பங்கும் உள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அவ்வாறு மறுத்தார்கள் என்றால் அவர்கள் இந்த நாட்டின் எதிரிகள் ஆவர்.
அரசை எரித்துவிடும்
ஆலை தொழிலாளர்களும், விவசாயிகளும் மராத்தி பேசும் நாட்டை உருவாக்க தங்கள் ரத்தத்தை இந்த நிலத்தில் சிந்தினர். இன்று அவர்கள் அதிருப்தியில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ஒரு தர்மா பாட்டீல் மந்ராலயாவில் தற்ெகாலை செய்திருக்கலாம். இன்று ஆயிரம், ஆயிரம் தர்மா பாட்டீல்கள் மந்திராலயா நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவர்களின் கோபமும், வலியும் இந்த அரசை எரித்துவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story