போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது.

சென்னை,

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது.

2014-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்துக்கு பதில் சாலை போக்குவரத்து-பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் புதிய சட்டம் உருவாக்க முயற்சி நடந்தது. ஆனால் மோட்டார் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மறைமுகமாக மத்திய அரசு கையாண்டு, அந்த சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற மேல் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் போக்குவரத்து கழகங்களே இல்லாமல் போய்விடும். பஸ் கட்டண நிர்ணய உரிமை மாநில அரசிடம் இருந்து பறிக்கப்படும். எனவே இந்த போக்கை கண்டித்தும், இந்த சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story