தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி உள்பட 11 பேர் விடுதலை, ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி உள்பட 11 பேரை விடுதலை செய்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு,
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி போட்டியிட்டார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட்டார். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தேர்தலின் போது விதிமுறைகள் மீறப்படுவதாக 2 தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் 14-5-2016 அன்று தேர்தல் விதிமுறைகளை மீறி தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நடந்து கொண்டதாகவும், அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக ஆட்களை திரட்டி ஊர்வலம் சென்றதாகவும் ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி சண்முகசுந்தரம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக சித்தோடு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளருமான சு.முத்துசாமி சேர்க்கப்பட்டார். அவருடன் மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் குமாரசாமி, முருகேசன், கருணாநிதி, ராஜேந்திரன், சுப்பிரமணியன், முருகேசன்(மைவிழி) ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஈரோடு 3-வது எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட்டு முருகன் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி உள்பட 11 பேர் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் தி.மு.க. வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் அருட்செல்வன் ஆஜரானார்.
தேர்தல் முடிவு வெளிவந்த பின்னர் போடப்பட்ட இந்த வழக்கில் தி.மு.க.வினர் வெற்றி பெற்று உள்ளனர்.

Related Tags :
Next Story