தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி கைது


தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 March 2018 3:30 AM IST (Updated: 14 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மொக்கை (வயது 46). கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற போலீஸ் ஏட்டு அழகிரிசாமி மற்றும் போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அதன் பின்னர் அவரை தேனி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளார். இதற்கிடையே தற்கொலை முயற்சியை தடுக்க சென்ற போது, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் ஏட்டு அழகிரிசாமி, தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், தற்கொலைக்கு முயன்றதாகவும், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மொக்கை மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story