போடி குரங்கணியில் கொதித்த மலையை குளிர்வித்த மழை: ‘தாமதமாய் ஏன் வந்தாய்?’ என வருந்திய மக்கள்
போடி குரங்கணி பகுதியில் காட்டுத்தீயால் கொதித்த மலையை குளிர்விக்கும் வகையில் நேற்று மழை பெய்தது. ‘உயிர்ப்பலிகள் ஏற்பட்ட நிலையில் தாமதமாய் ஏன் வந்தாய்’ என்று மக்கள் வருந்தினர்.
தேனி,
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதி அமைந்து உள்ளது. தென்னிந்திய திரையுலகின் ‘சின்னக் கோடம்பாக்கம்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு இந்த இடம் சிறப்பு பெற்றுள்ளது. கும்கி, மைனா, அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டு உள்ளன.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைப் பகுதியில், கொட்டக்குடி ஆறு உற்பத்தியாகிறது. இளநீர் போல் தித்திக்கும் சுவை கொண்ட தண்ணீர் இந்த ஆற்றில் தவழ்ந்து ஓடும். அப்படிப்பட்ட குரங்கணியில், காட்டுத்தீ கோரத்தாண்டவம் நிகழ்த்தி சென்றுள்ளது. எங்கிருந்தோ வந்த ஒரு பொறியில் உருவான தீ, சுமார் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு வனத்தை அழித்து விட்டது.
மலையேற்ற பயிற்சிக்கு வந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் உடல் கருகி இறந்தனர். காட்டுத்தீ வடிவில் சுற்றுலா பயணிகளின் உயிரைக் குடித்த மலை, தனது கொதிப்பு அடங்காமல் தக, தகத்துக் கொண்டே இருந்தது.
மலையின் கொதிப்பை அடக்கவும், சாந்தப்படுத்தவும் நேற்று அங்கு சாரல் மழை பெய்தது. அதிகாலையில் தொடங்கிய மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. காலை 10 மணியளவில் சுமார் 1 மணி நேரம் பெய்த மிதமான கனமழை, மலையின் கொதிப்பு, ஆக்ரோஷம் அடங்கி, மலையை குளிர்வித்தது.
மழை பெய்ததால், உருவான சிற்றாறுகளில் தண்ணீர் கருமை நிறத்தில் ஓடி வந்தது. அதேபோல், தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மழை பெய்து, வெயிலை விரட்டி குளிர்வித்தது. இருந்தாலும், ‘இந்த மழை, ஞாயிற்றுக்கிழமை பெய்து இருக்கக்கூடாதா?’ ‘தாமதமாய் ஏன் வந்தாய்?’ என மழையை பார்த்து மக்கள் பலர் வருந்தினர். சமூக வலைதளங்களிலும் மழையை வரவேற்பதை விட, வசை பாடியே பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டனர்.

Related Tags :
Next Story