பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து உதவி இயக்குனர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சி துறையினர் முற்றுகை
ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை, ஊரக வளர்த்துறை அலுவலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர்கள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்று கொண்டனர். இந்தநிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சி துறையினர் திடீரென்று முற்றுகையிட்டனர்.
மேலும் பணியை புறக் கணித்து, அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பெரும்பாலான அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார் கூறும்போது, பழனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி செயலர்கள் 10 பேரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்தார். அந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங் களில் பொறுப்பேற்று கொண்டனர்.
அதன்பின்னர் சில நாட்கள் கழித்து, முறைகேடுகளில் ஈடுபட்டதால் அந்த ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கை வெளியிட்டார். இதனால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனால் அவர்களால் அந்த அலுவலகங்களில் பணி செய்ய முடியாத நிலைமை ஏற்பட் டுள்ளது.
எனவே இடமாற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாற்று அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் அவர்களை அதே அலுவலகத்தில் பணியாற்ற உத்தரவிட வேண் டும். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், என்றார். ஊரக வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story