மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பலியானார்.
மேட்டுப்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் பெரியாண்டிபாளையம் நாச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. பனியன் வியாபாரி. இவரது மகன் சந்தோஷ்(வயது 20). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் சந்தோஷ் தனது நண்பர்கள் சிலருடன் மதியம் 2.30 மணியளவில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட காரில் புறப்பட்டார். காரை சந்தோஷின் நண்பர் மனோஜ்குமார் ஓட்டினார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் வந்த அவர்கள், மாலை 3.30 மணிக்கு நெல்லித்துறை அருகே விளாமரத்தூர் குண்டுக்கல்மடுவு பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அங்கு சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் மனோஜ்குமார், ரஞ்சித், மோகன், கார்த்திக்ராஜ், கவுதம் ஆகியோர் ஆற்றின் கரையோரத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அதில் சந்தோஷ் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது திடீரென நிலைதடுமாறி அவர் ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் நீரில் மூழ்கிய அவர், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாலை 4.30 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சந்தோஷின் உடலை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story